டெல்லி: குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக ஸ்ரீ ஜகதீஷ் தாக்கூர் நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.
2022ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு மாற்றங்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை செயல்படுத்தி வருகிறது. பாஜக கோட்டையான குஜராத் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில், சமீபத்தில் கன்னையா குமார், ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி, போன்ற இளம் தலைவர்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்ததுடன், . குஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவுத்ரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக ஸ்ரீ ஜகதீஷ் தாக்கூர் நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஜகதீஷ் தாக்கூர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.