டெல்லி:
டந்த 17ந்தேதி நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் கட்சி இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நேரு-காந்தி குடும்பத்திற்கு வெளியே இருந்து அதன் முதல் தலைவரை புதன்கிழமை தேர்ந்தெடுத்துள்ளது. கார்கே ராஜதந்திரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய சசி தரூரை தோற்கடித்தார் என்று அக்கட்சியின் தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

கடந்த 24 ஆண்டுகளில் நேரு-காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று புதுடெல்லியில் நடக்கும் விழாவில், மல்லிகார்ஜூன கார்கே அதிகாரப்பூர்வமாக தலைவராக பதவி ஏற்கிறார். ராகுல் நடத்தும் ஒற்றுமை யாத்திரைக்கு, தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே ராகுலும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று தெரிய வந்துள்ளது.