சேலம்:

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ; ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும்,  திராவிட இயக்கத்தின் எண்ணங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது  என்றும் கூறினார்.

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில்,  தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்ற னர்.

இந்த நிலையில்,  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மீண்டும் தேர்தல் பிரசாரத்திற் காக மீண்டும்  இன்று தமிழகம் வந்துள்ளார். இன்று  கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன் றம் ஆகிய 4 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகம் வந்திருந்தார். இன்று  முற்பகல் 12 மணி அளவில்  தர்மபுரி அருகே  சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில், காங்கிரஸ், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சித்தலைவரான மு.க.ஸ்டாலின் உள்பட சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய நாடாளு மன்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களும் இருந்தனர். ராகுல்காந்தியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர்.

முன்னதாக தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,  ராகுல் காந்தி வெளியிட்ட  காங்கிரஸ் கட்சியின்  தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக வும் மோடி வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஜீரோவாகவும் உள்ளது என குற்றம் சாட்டிய ஸ்டாலின்,  கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகள் என எதையும் வெளியிடாத பா.ஜ.க., வெற்றுக் கனவுகளைப் பற்றி மட்டுமே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது என்றும் கடுமையாக குற்றம் சாட்டினார்.

விவசாயிகள் கடன் ரத்து, கல்விக் கடன் ரத்து, மாநில உரிமைகளைப் பெற்றுத் தருவது போன்ற மக்கள் நலத்திட்டங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின்  ராகுல்காந்தியை பாராட்ட அண்ணா இல்லையே, கலைஞர் இல்லையே என்ற கவலை என்னை ஆட்கொண்டது என்றார்.

ஏழைத் தாயின் மகன் என்று கூறும் பிரதமர் மோடி விவசாயிகளைப் பற்றி கவலைப்பட்டிருக் கிறாரா? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின்,  மன்னர் குடும்பத்தவர் என்று விமர்சிக்கப்படும் ராகுல்காந்திக்கு வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வு உள்ளது, ஆனால் தேநீர் விற்றதாகக் கூறும் பிரதமர் மோடியோ கோடீஸ்வரர்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

கடந்த ஐந்தாண்டுகளாக கொடுமைகளை சகித்து கொண்டு இருக்கும் மக்களை  ராகுல்காந்தி காப்பற்ற வேண்டும் என்றும், நேரு குடும்பத்தில் இருந்து வந்துள்ள ராகுல் நல்லாட்சி தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நாடும் நமதே நாற்பதும் நமதே என உறுதி கூறுவதாகத் தெரிவித்த மு.க.ஸ்டாலின்,  முதன் முதலில் ராகுலை பிரதமர் வேட்பாளர் என அறிவித்து தாம்தான் என்றவர், ராகுலை இளம் தலைவர் என அழைப்பதை விட இளம் பிரதமர் என அழைப்பது சரியாக இருக்கும் .

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.