டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வியூக குழு  ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும்  29ந்தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில், வேளாண் சட்டம் வாபஸ் பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. மேலும், பெகாசஸ் விவகாரம், எரிபொருள் விலை உயர்வு உள்பட  பல்வேறு பிரச்னைகளில் புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகிறது.

அதன்படி, காங்கிரஸ் கட்சி சார்பில், நாடாளுமன்ற எம்.பி.க்களின் வியூக குழு  ஆலோசனை கூட்டம் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தொடரில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.