டெல்லி: டெல்லி கோட்லா சாலையில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகமான ‘இந்திரா பவன்’ இன்று திறக்கப்பட்டது. காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி திறந்த வைத்தார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

டெல்லிகோட்லா சாலையில் உள்ள 9A இல்  கட்டப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ்  கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவன்’-ஐ காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி  இன்று காலை திறந்து வைத்தார்.

கடந்த 47 ஆண்டுகளாக 24, அக்பர் சாலை வளாகத்தில் செயல்பட்டு வரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி, தற்போது புதிய முகவரிக்கு மாறி உள்ளது. இது வரலாற்றில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த கட்சித் தலைவர்கள்  கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் குத்து விளக்கு ஏற்றப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குத்துவிளக்கை ஏற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட மூத்த தலைவர்கள் குத்துவிளக்கினை ஏற்றினர். தொடர்ந்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சி தலைவர்கள் தங்களது கட்சி அலுவலகம் தொடர்பான கடந்த கால நிகழ்வுகளை பேசி வருகின்றனர்.

45 ஆண்டுகளுக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு மாற்றம்! 15ந்தேதி திறப்பு விழா