சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் இன்று காலை கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் திடீர் மாரடைப்பு காரணமாக, யாத்திரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 76. தற்போது யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
பஞ்சாப் லூதியானாவில் காங்கிரஸ் யாத்திரையில் கலந்து கொண்ட எம்பி சந்தோக்சிங் மருத்துவமனையில் காலமானார். ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்து கொண்ட ஜலந்தர் பாராளுமன்ற தொகுதி எம்பி சந்தோக்சிங் சவுத்ரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை பஞ்சாப் பஞ்சாப் மாநிலம் பில்லூரி நடைபெற்ற யாத்திரையில் சந்தோக்சிங் பங்கேற்று ராகுலுடன் நடைபயணம் மேற்கொண்டு வந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அருகே இருந்தவர்கள் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் எம்.பி.சந்தோக் சிங் சவுத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, யாத்திரையை வழிநடத்திய ராகுல் காந்தி, அணிவகுப்பை விட்டுவிட்டு, மூத்த காங்கிரஸ் தலைவர் அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவமனைக்கு விரைந்தார். தொடர்ந்து இன்று பிற்பகுதியில் ராகுல்காந்தி, ஜலந்தரில் சௌத்ரியின் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, குடும்பத்தினரை சந்திப்பார் என்று தெரிகிறது.
இதுகுறித்து மூத்த காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஜலந்தரின் காங்கிரஸ் எம்பியான சந்தோக் சிங் சவுத்ரி (வயது 76) இன்று காலை பாரத் ஜோடோ யாத்திரையின் போது திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் காரணமாக யாத்திரையின் அட்டவணையில் சில மாற்றங்கள் இருக்கும், அவை விரைவில் பகிரப்படும் என்று தெரிவித்துள்ளார்.