டெல்லி: மணிப்பூரில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ராகுல் காந்தி மீண்டும் மணிப்பூர் கிளம்பிய நிலையில், அங்குள்ள முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசி வருகிறார். . ஏற்கனவே அங்கு சென்று மக்களை சந்தித்து வந்த நிலையில்,  இன்று  எதிர்க்கட்சித் தலைவராக  மீண்டும் பயணிக்கிறார்.

முன்னதாக அஸ்ஸாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை  சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், தலைவர் பூபென் போரா தலைமையிலான அஸ்ஸாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (APCC) குழு, லோபி ராகுல் காந்தியிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தது, அசாமில் வற்றாத வெள்ளம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்ப வலியுறுத்தியது.

மணிப்பூரில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட இனமோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு உள்ள நிலையில், மோதல்களும் கட்டுக்குள் வந்துள்ளன. இந்த இனமோதலில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி நேரில் சென்ற சந்திக்க வேண்டும் என எதிர்க்கட்கிகள் கூறிய நிலையில், பிரதமர் அங்கு செல்வது பாதுகாப்பில்லை என கூறி அவர் செல்வது தவிர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே இரு முறை  மணிப்பூருக்கு  சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துள்ள ராகுல்காந்தி, தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள நிலையில் முதன்முறையாக மீண்டும் மணிப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.  போகும் வழியில் அஸ்ஸாம் வெள்ளப்பாதிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

இன்று காலை டெல்லி விமான நிலையம் சென்றடைந்த ராகுல் அங்கிருந்து அஸ்ஸாமின் சில்சாருக்கு பயணித்தார்.  சில்சார் சென்றடைந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மணிப்பூர் முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் வரவேற்றார். அவர், ஃபுலெர்டால், இளைஞர் பராமரிப்பு மையத்தில் உள்ள தளையில் உள்ள நிவாரண முகாமை பார்வையிட்டு, பின்னர் மணிப்பூருக்குச் செல்கிறார்.  தலை இளைஞர் பாதுகாப்பு மையமான ஃபுலர்டலில் உள்ள நிவாரண முகாமை பார்வையிட்டார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாநில காங்கிரசாருக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், அங்கிருந்து மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்துக்கு. அங்குள்ள நிவாரண முகாம்களைப் பாா்வையிடு, அங்கு தங்கியிருக்கும் மக்களிடையே உரையாட உள்ளார். பின்னர், விஷ்ணுபூா் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமக்களையும் பாா்வையிடும் அவா், பின்னா் இம்பாலில் மாநில ஆளுநா் அனுசுயா உய்கேவை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளாா் என்று மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.