சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

75வயதாகும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று திடீரென அவருக்கு  உடல்நலக் குறைவு  ஏற்பட்டதால், சென்னையில் உள்ள பிரபல தனயிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு அவரது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நிமோனியா காய்ச்சல்  காரணமாக  அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று  நேரில் சென்று நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.