சென்னை
காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து காங்கிரஸ் சிறு பானமைத் துறைத் தலைவர் அஸ்லாம் பாஷா ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் 5 ஆம் தேதி அன்று மத்திய அரசு விதி எண் 370 ஐ ரத்து செய்து காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை விலக்கிக் கொண்டது. அத்துடன் காஷ்மீர் மாநிலத்தை இரு யுனியன் பிரதேசமாகப் பிரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி மாநிலம் எங்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்ட்னம் தெரிவித்து காங்கிரஸ் சிறுபான்மைத் துறை தலைவர் ஜெ. அஸ்லம் பாஷா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர்,
”காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததெல்லாம் பாலபாடம். 565 சமஸ்தானங்களளைக்கெண்டது இந்தியா. அதில் 50% பிரிட்டீஸ் நேரடி ஆட்சியிலும் 50% சமஸ்தானங்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தியா உருவாக்கத்திற்கு முன் வரலாற்றை ஆய்வு செய்தால் இந்திய வரலாறு என்பதே முகலாயர்கள் வரலாறாக இருந்தது. பின் அது பிரிட்டீஸ் இந்திய வரலாறாக மாறியது.. இதில் ஆரியர்களின் திருத்தத்தால் மௌரிய பேரரசில் மட்டுமே உள்ளது. .ஆக இந்திய் வரலாறை ஆரிய வரலாறாக மாற்ற 500 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.ஆங்கிலேயர்களுக்கு அடிவருடிகளாகவும் இந்திய சுதந்திரப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தும் இந்திய வரலாறு ஆரிய வரலாறே என 70% வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.அதன் நீட்சியே ’ஆரியர்கள் இருத்தார்கள். மொகலாயர்கள் படையெடுத்து வந்தார்கள்’ என்ற செய்தி.
சுதந்திர இந்தியா ஒற்றுமையுடன் இருப்பது ஆரிய அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் அகண்ட பாரதம் பேசிக்கொண்டே பிரிவினைக்கு தூபம் போட்டார்கள்.இந்தியா இரு பெரு முதலாளிகளுக்கு சந்தையாக வடிவமைக்கப்பட்டது. பாக்கிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து சர்.சி.பி. ராமசுவாமி அய்யரால் திருவிதாங்கூர் சமஸ்தானம் தனிநாட அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.அப்போதே பிரிட்டன் பிரதமர் கிளமெண்ட் அட்லி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் சமஸ்தானங்கள் தனியாகவோ அல்லது பாக்கிஸ்தானுடனோ இந்தியாவுடனோ இணைந்துகொள்ளாம் என்பதே அது.
உடனே ஜவகர்லால் நேரு அவர்களின் ராஜதந்திர நடவடிக்கைககளால் ஐதராபாத் மைசூர் குவாலியர் ஜெய்ப்பூர் ஜோத்பூர் போபால் பாட்டியால சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஆனால் ஜம்மு காஷ்மீர் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி இந்து மன்னரால் ஆளப்பட்ட பகுதி.
மன்னர் ஹரிசிங் காஷ்மிர் தனிநாடாக அறிவித்தார்.மன்னர் ஹரிசிங்கின் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராக சேக்அப்துல்லா களம் இறங்கினார் அவரின் தேசிய மாநாட்டு கட்சி மதசார்பற்ற காஷ்மீர் என்பதே தனது இலட்சியம் என அறித்தார். இடதுசாரிகளின் ஆதரவு சேக்அப்துல்லாவிற்கு பலமாக இருந்தது.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதே காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு என்று நம்பினார்.பதான் பழங்குடி மக்கள் படையெடுப்பு பாக்கிஸ்தான் ஆதரவு ஐ.நா. பஞ்சாயத்து பொதுவாக்கெடுப்பு என நீண்டு இறுதியாக 370 என்ற சிறப்பு அந்தஸ்த்துடன் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.அதன்படி ஐதராபாத் ஜூனாகத் ஜம்மு காஷ்மீர் இவற்றில் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும். காந்தி படேல் சியாமபிரசாத்முகர்ஜி ஆகியோரின் ஒருமித்த முடிவு.
பின்னர் இந்திய வரலாறு தெரியாதமோடி அரசு ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை அமல்படுத்த முனைகிறது ஒரே நாடு ஒரே சட்டடம் ஒரே மொழி ஒரே தேர்தல் என பிதற்றுகிறது.ஆரியர்கள் இருந்தார்கள் முஸ்லீம்கள் வந்தார்கள் என்ற திரிபுவரலாற்றை உறுதிசெய்யும் நடவடிக்கையே காஷ்மீர் விவகாரம். நாடாளுமன்றத்தில் ஒரு முஸ்லீம் உறுப்பினர்கூட இருக்கக்கூடாது. ஒரு முதலமைச்சர் கூட இருக்கக்கூடாது என்பதன் வெளிப்பாடே காஷ்மீரின் மாநில அந்தஸ்த்து நீக்கம்.இதன் மூலம் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கே முஸ்லீம்கள் வந்தேரிகளே என வரலாற்றை மாற்ற பீஜெபி முயற்சிக்கிறது.
அது இந்தியாவிற்கு பேராபத்தாக முடியும் என்பதை உணராமலேயே செய்கிறது.ஆரியர்கள் தங்கள் சூத்திர அடிமைகளைக்கொண்டு நடத்ததும் நாடகம் அவர்களுக்கு எதிராகவே திரும்பும் என்பதை உணர வேண்டும்.
ஆஷிபா என்ற சிறுமியை வண்புணர்வு செய்து கொலை செய்ததின் பின்னனியில் முஸ்லீம்களை அச்சுறுத்தி அகதிகளாக வெளியேற்றிவிட வேண்டும். பின்னர் அதை பண்டிட்டுகளுக்கான மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே பீஜெ.பி நோக்கம்.வரலாற்றை உங்கள் விருப்பத்திற் கு வளைக்க நினைத்தால் ஹிட்லரின் வரலாறை நாடே சொல்லும்.
தங்கள் அன்புள்ள,
வழக்கறிஞர் ஜெ. அஸ்லம் பாஷா
தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத்துறை”
எனத் தெரிவித்துள்ளார்.