புதுடெல்லி:

மருத்துவ உரிமை, வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வியில் சலுகை ஆகியவை வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி வெளியிட இருக்கும் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று தெரிகிறது.


நகர்ப்புறங்களில் மாதம் ரூ. 10 ஆயிரம் சம்பாதிக்கும் வகையில் 100 நாள் வேலை உறுதித் திட்டம், பொதுவான மருத்துவத் திட்டம், உயர் கல்வி படிப்போருக்கான கடனுக்கான வட்டி ரத்து, குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்தல், ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பிரதானமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க நடவடிக்கை என்ற உறுதியும் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீட்டர் ரீடிங், சிறு கடைகள் போன்றவற்றை அமைக்க இளைஞர்களுக்கு உதவும் திட்டமும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று தெரிகிறது.