பெங்களூரு:
காங்கிரஸ் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை மத்திய அரசால் ஒட்டு கேட்கிறது என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ கர்நாடகாவில் சிலரது தொலைபேசி பேச்சுகள் ஒட்டு கேட்கப்படுகின்றன என நான் நீண்ட நாட்களாக கூறி வருகிறேன். தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொலைபேசி உரையாடல்கள் தொடர்ந்து ஒட்டு கேட்கப்படுகின்றன. சட்டப்படி இது தவறு’’ என்றார்.
அவரிடம் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதற்கு மத்திய அரசு பொறுப்பு என கூறுகிறீர்களா? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். ‘‘அவர்கள் இல்லையெனில் வேறு யார்?. எங்களுக்காக நாங்கள் இதனை செய்ய வேண்டியது ஏன்?. அவர்களே இதனை செய்கின்றனர்’’ என்றார்.