டெல்லி: அக்னிபாத், அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் காங்கிரசார் இன்று மாலை குடியரசு தலைவரை சந்தித்து மனு அளிக்க பேரணியாக புறப்பட்டனர். இதனால், டெல்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,  நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.  கடந்த 5 நாட்களாக அக்னிபாத் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக வட மாநிலங்களில் அசாதரண சூழலே நிலவி வருகிறது.  இதன் தொடர்ச்சியாக  இன்று  பல்வேறு இளைஞர் அமைப்புகள் நாடு தழுவிய போராட்டத்திற்கு ( பாரத் பந்த்)  போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

அத்துடன்  அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் இன்று காலை  முதலே  டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக   நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியிடம் நடத்தப்பட்ட  விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தாக்கப்பட்டது குறித்தும் குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க உள்ளதாக அஜய் மக்கான்  தெரிவித்தார்.

இன்று காலை 10.30 மணிக்கு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தில்,  காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், முக்கிய தலைவர்கள்  கலந்துகொண்டனர். மேலும் ஆயிரக்கணக்கான கட்சியினரும் கலந்துகொண்டனர். ஜந்தர்மந்தரில் நடைபெற்று வந்த போராட்டத்தை தொடர்ந்து இன்று மாலை குடியரசுத் தலைவரை சந்தித்து இன்று மாலை மனு அளிக்க  பேரணியாக புறப்பட்டனர். இதனால் டெல்லி நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துள்ளது.  பல இடங்களில்  போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு,  அக்பர் சாலை, மோதிலால் நேரு உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Video Courtesy: Thanks ANI

4வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார் ராகுல்காந்தி – ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம்….