டெல்லி: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாள்(மே 27) இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வனத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர்.
Patrikai.com official YouTube Channel


