புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட். இவர், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். டாக்டரின் ஆலோசனையை பின்பற்றி வருகிறேன். விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.