டெல்லி: இந்தியாவின் சொத்துக்களை நட்பு முதலாளிகளிடம் ஒப்படைக்க நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளது, மக்கள் சொத்துக்களை தாரை வார்க்கிறது என பொது பட்ஜெட் குறித்து ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2021-22ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நேற்று (பிப்ரவரி 1ந்தேதி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் முதன்முறையாக, காகிதமில்லாமல் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டதுடன், எல்ஐசி உள்பட பொதுநிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், பட்ஜெட் குறித்து, கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார்.
பாஜக அரசு கொண்டு வந்துள்ள பட்ஜெட், “குரோனி முதலாளித்துவ” குற்றச்சாட்டில், நிர்மலா சீதாராமனின் மறுபிரவேசம் என்றும், மக்களை மறந்து விட்டு பொது சொத்துக்களை நெருங்கிய தொழிலதிபர் நண்பர்களுக்கு தாரைவார்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் மறுக்கப்பட வேண்டிய அம்சங்களோடு இநத் பட்ஜெட் உருவாக்கப்படவில்லை. உதவி தேவைப்படுகிற மக்களின் கைகள் வெறுங்கைகளாக இருக்கையில், பட்ஜெட் சில நட்பு முதலாளிகளுக்கு சாதகமானது, அடுத்த நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் பங்கு விற்பனை மூலம் இந்தியாவின் சொத்துக்களை நட்பு முதலாளிகளிடம் ஒப்படைக்க நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
“மக்களின் கைகளில் பணத்தை வைப்பதை மறந்துவிடுங்கள், இந்தியாவின் சொத்துக்களை தனது நட்பு முதலாளித்துவ நண்பர்களிடம் ஒப்படைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது” என்று அவர் மத்திய பட்ஜெட்டை வழங்கிய பின்னர் கூறினார்.
காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த பட்ஜெட் குறித்து கூறுகையில், ‘மிகநெருக்கடியான காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக வரவேண்டிய பட்ஜெட் மிகச்சதாரணமாக வகுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்வரும் மாநிலங்களில் மட்டும் வாக்குகளுக்காக சில திட்டங்களை அறிவித்திருக்கிறது. துறைகள்சார்ந்து பல ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு செலவினம் குறித்தும்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதற்கான அறிகுறிதெரியவில்லை’ என்றார்.