அகமதாபாத்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ள குஜராத் சென்ற மூத்த காங்கிரஸ் நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில், இன்று மற்றும் நாளை (ஏப்ரல் 8 மற்றும் 9 ந்தேதி) ல் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள், காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என நாடு முழுவதிலுமிருந்து 3,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள குஜராத் சென்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த மாநாட்டிற்கு சென்ற ப.சிதம்பரம் தொடக்கம் முதலே சோர்வாகவே காணப்பட்டார். இந்த நிலையில் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த அவருக்கு திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளி வரவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், தனது தந்தை நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.