டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என  காங்கிரஸ் கட்சி கடிதம் ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதி உள்ளது.

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது காரசாரமான வாதங்கள் நடைபெற்றன. பின்னர் பதிலுரை அளித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் ராஜ்யசபாவில்,  கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதிலுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலவையின் முன்னாள் தலைவர் ஹமீத் அன்சாரிக்கு எதிராக “இழிவான” கருத்துக்களை கூறியதாகக் கூறி, ராஜ்யசபாவில் பிரதமருக்கு எதிரான சிறப்புரிமை நடவடிக்கைகளை பெரும் பழைய கட்சி இப்போது கோரியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் “பிரதமரின் உரிமை மீறல் மற்றும் சபையை அவமதிக்கும் ஒரு விஷயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

கடந்த 2-ம் தேதி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி அளித்த பதிலுரையின் போது, ‘2014-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது மாநிலங்களவையில் எங்கள் பலம் குறைவாக இருந்தது. அவைத் தலைவர் எதிர்ப்புறத்திற்கு ஆதரவாக இருந்தது’ என்றார்.

பிரதமரின் இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹமீத் அன்சாரியை பிரதமர் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல. பிரதமர் மோடி செய்ததைப் போல் வேறு எந்தப் பிரதமரும் மக்களவை சபாநாயகரையோ, மாநிலங்களவை அவைத் தலைவரையோ விமர்சித்துப் பேசியது இல்லை. அனைத்து விதிமுறைகளையும் பிரதமர் மீறிவிட்டார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.