க்னோ

பி மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக உள்ளதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாகக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து, தேர்தலுக்குத் தயாராவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் நேற்று லக்னோவில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது பிரியங்கா காந்தி, ‘

‘அடுத்த வருடம் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக அல்லாத மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து இப்போது கூறினால் அது மிகவும் முன்கூடியதாக இருக்கும்.

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கக் காங்கிரஸ் திறந்த மனதுடன் இருக்கிறது.

அதே வேளையில்  காங்கிரஸ் கட்சிக்கு முன்னுரிமை தரவும். பாஜ.வை தோற்கடிக்க  வேண்டும் என்பதும் காங்கிரசின் ஒரே நோக்கம், ஆகும்.   பாஜகவைத் தோற்கடிக்கக் காங்கிரஸ் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக உள்ளது”

என தெரிவித்துள்ளார்

UP assembly election, Alliance, Congress, ready, priyanka Gandhi