காங்கிரஸ் கூட்டணி மோசம் – பாஜக கூட்டணி படு மோசம் :  தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி

Must read

தராபாத்

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல் தலைவரும் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகனுமான ராமாராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது.   தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனான ராமாராவ் இந்த கட்சியின் செயல் தலைவர் பதவி யில் உள்ளார்.   இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

ராமாராவ் அந்த பேட்டியில், “மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும்.   ஆனால் அவ்வாறு நடப்பதில்லை.  பிரதமர் மோடி முன்பு குஜராத் முதல்வராக இருந்த போது இதனால் கடும் பாதிப்பு அடைந்துள்ளார்.  இது குறித்து முன்பு அவர் பலமுறை பேசி உள்ளார். ஆனால் தற்போது அவரும் அதே தவறை செய்து வருகிறார்.

முதல்வர் மோடி சுகாதாரம், கல்வி போன்றவை மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  ஆனால் பிரதமர் மோடி அனைத்து துறைகளும் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என விரும்புகிறார்.   முன்பு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது அதிகாரம் சோனியா காந்தியிடமும் ஆட்சி மன்மோகன் சிங் இடமும் இருந்தது.   தற்போது அனைத்துமே எந்த பதவியிலும் இல்லாத அமித்ஷா விடம் உள்ளது.

காங்கிரஸ் கூட்டணி அரசு மோசமானது.   பாஜக கூட்டணி அரசு படு மோசமானது.

ஆயுஷ்மான் பாரத் என்னும் பொது சுகாதார காப்பிட்டு திட்டம் மத்திய அரசால் அனைத்து மாநிலங்கள் மீதும் திணிக்க்ப்படுகிறது.   இது தேவையா? தெலுங்கானா அரசு ஏற்கனவே இதை விட நல்ல முறையில் ஆரோக்யஸ்ரீ என்னும் திட்டத்தை நடத்தி வருகிறது.    அப்படி இருக்க புதிய திட்டம் தேவை இல்லை.  இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடன் மாநிலங்களில் திணிக்கப்படுகிறது.

நாங்கள் மோடி அல்லது ராகுல் மட்டுமே நாட்டை ஆள முடியும் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆகவே நாங்கள் மூன்றாவது ஒரு மகா கூட்டணியை அமைக்க உள்ளோம்.   ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நினைத்தால் ஸ்டாலின் மற்றும் கர்நாடக முதல்வருடன் இணைந்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோர முடியாதா? நிச்சயமாக முடியும்.

மாநிலங்களின் எதிரி என ஒரே மனிதர் இருக்கும் போது அவரை எதித்து கூட்டணி அமைப்பதில் தவறில்லை.   இந்த கூட்டணி 2019 ஏப்ரலுக்குள் அமைந்தாக வேண்டும் என்பதி அவசியம் இல்லை.   ஆனால் அனைத்து மாநிலக் கட்சிகளும் விரைவில் ஒன்றிணைய வேண்டும் என்பது அவசியம் ஆகும்.

அநேகமாக இந்த  தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு 11-110 இடங்கள் கிடைக்கலாம்.  பாஜகவுக்கு 150 இடங்களுக்கு சற்றே அதிகமாக கிடைக்கலாம்.   மொத்தமாக இரு கட்சிகளும் இணைந்தே 270 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது.   இந்நிலையில் காங்கிரசுக்கு மற்ற கட்சிகள் ஆதரவளிப்பதற்கு பதிலாக காங்கிரஸ் மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article