கபூர்தலா
பஞ்சாபில் நடந்த மாநகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று பாஜக இறுதி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த மாதம் 14 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடைபெற்றன. இந்த தேர்தலில் 71.39% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 7 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
கபூர்தலா : காங்கிரஸ் – 45, சி அ த -3, மற்றவை 2
அபோகர் : காங்கிரஸ் – 49 சி அ த – 1
மோகா: காங்கிரஸ் 20, சி அ த – 15 ஆம் ஆத்மி -4, பாஜக 1, மற்றவை 10
பதாலா: காங்கிரஸ் 36 சி அ த – 6, ஆம் ஆத்மி – 3, பாஜக -4 மற்றவை – 1
பதிந்தா : காங்கிரஸ் – 43, சி அ த -7
ஹோசியார்பூர் : காங்கிரஸ் -41. பாஜக – 4. ஆம் ஆத்மி -2, மற்றவை – 3
பதான்கோட் : காங்கிரஸ் – 37 பாஜக – 11, சி அ த – 1 மற்றவை 1
தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் முதல் இடத்திலும், சிரோமணி அகாலி தளம் இரண்டாம் இடத்திலும், ஆம் ஆத்மி 3 ஆம் இடத்திலும் பாஜக 4 ஆம் இடத்திலும் உள்ளன. விவசாயிகள் போராட்டம், காரணமாக பாஜகவுக்கு கடும் தோல்வி ஏற்பட்டு கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்