டெல்லி: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 99 இடங்களை கைப்பற்றி உள்ள காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வாகி உள்ளது. இதையொட்டி, எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்யும் வகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது.
அதன்படி, ஜூன் 8ம் தேதி காலை 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடந்து முடிந்த 18வது மக்களவைக்கான தேர்தலில், ‛ இண்டியா ‘ கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை பிடித்துள்ளது. இதனால்,எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. இதுவரை கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெற்றுள்ளதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளதால். இதனால் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட உள்ளார். எதிர்க்கட்சி தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும் என காங்கிரசில் பல தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதுகுறித்து முடிவு செய்ய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது.
முன்னதாக காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு, செயற்குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட உள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இதைத்தொடர்ந்து, டெல்லியில் வரும் ஜூன் 8ம் தேதி காலை 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், அரசியல் வியூகங்கள், எதிர்க்கட்சி தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு பிறகு, முதல்முறையாக செயற்குழு கூட்டத்தை காங்கிரஸ் கட்சி கூட்டியுள்ளது.