சண்டிகார்:
அரியானாவில் விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று கர்னலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்னலின் கராண்டா சுங்கச்சாவடி அருகில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள்ள டிவிட்டர் பதிவில், மீண்டும், விவசாயிகளின் இரத்தம் சிந்தி உள்ளது. இது இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்
Patrikai.com official YouTube Channel