டெல்லி: மத்திய பிரதேச இடைத்தேர்தலுக்காக முதல் கட்டமாக 15 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்யா சிந்தியா. அவருக்கு ஆதரவாக களத்தில் நின்ற 27 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து அந்த தொகுதிகள் காலியானவையாக அறிவிக்கப்பட்டது. அடுத்து வரக்கூடிய பீகார் சட்டசபை தேர்தலுடன் இதற்கான தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
இந் நிலையில் இந்த தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, திமானி, அம்பா, கோகத், குவாலியர், தாப்ரா, பந்தர், கரேரா, பாம்ரி, அசோக் நகர், அனுப்பூர், சான்ச்சி, அகர், ஹட்பிபால்யா, நீபனாகர், சான்வீர் ஆகிய 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது.