காந்திநகர்:
குஜராத் சட்டமன்ற காங்கிரஸ் ககுழு தலைவராக பரேஷ் தணனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 41 வயதாகும் இவர் எதிர்கட்சி தலைவராகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுராஷ்டிரா பகுதியில் வலுவான நிலையில் உள்ள பட்டீதார் சமூகத்தை சேர்ந்த இவர் அம்ரெலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குஜராத்தில் இருந்து மொத்தம் 3 முறை எம்எல்ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டமன்ற குழு தலைவராக இவரை நியமனம் செய்து கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதல் அளித்துள்ளார் என்று குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் அசோக் கெஹலாத் இதை தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel