மும்பை

காராஷ்டிரா சட்டசபை மேலவை தேர்தலில் காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது

மகாராஷ்டிரா சட்டசபை இரு அவைகளைக் கொண்டது.   இதில் மேலவையில் தற்போது 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.   இதற்கான தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.   அத்துடன் மே 28ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் இரு பாராளுமன்ற இடங்களுக்கு இடைத் தேரதல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மேலவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.   இரு கட்சிகளும் தலா 3 இடஙக்ளில் போட்டி இட உள்ளதாக தெரிய வந்துள்ளது.  வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலில் இரு கட்சிகளும் தலா ஒரு இடத்தில் போட்டியிட உள்ளன.

ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்ட இந்த இரு கட்சிகளும் அடுத்து வந்த சட்டசபை தேர்தலில் தனித் தனியே போட்டி இட்டன. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா இணைந்து போட்டி இட்டது.

சிவசேனா கட்சி வரும் 2019ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்துள்ளது.   எனவே காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அமைத்துள்ள கூட்டணி 2019ஆம் வருட பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.