ஐதராபாத்
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ரெட்டி புதிய சட்டப்பேரவை கட்டிடம் அமைக்க உள்ளதற்கு காங்கிரஸ் பாஜக இணைந்து எதிர்க்கின்றன.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எர்ரும் மஞ்ஜில் என்னும் கட்டிடத்தில் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலகம் இயங்கி வருகின்றன. மிகவும் புராதனமான இந்த கட்டிடம் இன்றும் பயணிகள் கண்களுக்கு விருந்தாக உள்ளது. இதைக் காண ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் இதை இடித்து விட்டு புதிய கட்டிடம் அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ரெட்டி திட்டமிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை மீறி சந்திரசேகர் நாயுடு கட்டிடம் அமைக்க கடந்த மாதம் 27 ஆம் தேதி பூமி பூஜை செய்தார். அவர் வாஸ்து வுக்காக இந்த கட்டிட மாற்றத்தை செய்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 1870 ல் அமைக்கப்பட்ட எர்ரும் மஞ்சில் இன்னும் வலுவுடன் உள்ளதாக கட்டிடக்கலை வல்லுனர்கள் சான்றிதழ் அளித்தனர். அயினும் அரசு தனது முடிவில் பிடிவாதமாக உள்ளது. இதற்கு ரூ. 400 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. நன்கு உள்ள ஒரு கட்டிடத்தை இடித்து விட்டு இவ்வளவு செலவில் புதிய கட்டிடம் தேவையா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த புதிய கட்டிடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத் நகரில் அனைத்துக் கட்சி வட்டமேஜை மாநாடு நடந்தது. இதில் காங்கிரஸ், பாஜக, தெலுங்கானா ஜன சமிதி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல கட்சிகள் கலந்துக் கொண்டன. அனைத்துக் கட்சிகளும் புதிய கட்டிடம் கட்டி மக்களின் பணத்தை வீணடிக்க நினைக்கும் முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.