புதுடெல்லி:
டெல்லியில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசு ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் இளைஞர்கள் சேருவதற்காக அக்னிபாத் என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது. இதற்கு இளைஞர்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த திட்டத்தினால், ஓய்வூதியம் கிடைக்காது. சலுகைகள் ரத்தாகும் என்று ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் கருதுகிறார்கள். இதனால், இந்த திட்டத்தை வாபஸ் பெறக்கோரி, பீகார் உள்பட பல வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தால் வன்முறை ஏற்பட்டது.
இந்நிலையில், டெல்லியில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பங்கேற்க உள்ளனர்.