சென்னை:

ண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துகள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரஜினிகாந்துடன் அவரது மகள் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.