புதுடெல்லி: 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிர் ரஞ்சன் சவுதரி,  ஓய்வூதியத்திற்கு வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெறுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
லோக்சபாவில் காங்கிரஸ் கட்சி தலைவரான அதிர் ரஞ்சன் சவுதரி, இராணுவம், கடற்படை, விமானப்படை, உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் ஊனமுற்றோர் ஓய்வூதியத்திற்கு வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெறுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு மறுஆய்வு கோரி கடிதம் எழுதியுள்ளார்.
கால்வான் பள்ளத்தாக்கில் சீன ஊடுருவல்காரர்களுக்கு எதிரான வீரமிக்க போராட்டத்தின் போது பலத்த காயங்களுக்கு ஆளான எராளமான இந்திய வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ராணுவ மருத்துவமனைக்கு நீங்கள் சென்றதை நான் பாராட்டியே ஆக வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய தனது கடிதத்தில் அதிர் ரஞ்சன் சௌதுரி குறிப்பிட்டிருந்தார்.
ஜூன் 15 ஆம் தேதி இரவு இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் நடந்த உக்கிரமான போரில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர் என்பது மிகவும் வருத்தமளிக்க கூடிய விஷயமாக இருந்தது, மேலும் அவர்களில் சிலர் ஊனமுற்றுள்ளனர்.
வருங்காலத்தில் இந்த ஊனமுற்ற வீரர்கள் எவ்வாறு சம்பாதித்து தங்கள் வாழ்வாதாரங்களை இயக்குவார்கள்? இது ஒரு கேள்விக்குறியே…..நீங்கள் தரும் இந்த இயலாமை  ஓய்வூதியம் அந்த துணிச்சலான வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, என்றும் அதிர் ரஞ்சன் சவுதரி தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.