பெங்களூரு

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்கள் ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுள்ள எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கு விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.   அவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 தினங்கள் அவகாசம் அளித்துள்ளார்.   காங்கிரஸ் மற்றும் ம ஜ த உறுப்பினர்கள் பெங்களூருவில் தங்கி இருந்தனர்.     ஆனால் அவர்களை சந்திக்க பாஜகவினர் முயன்றதாக தகவல்கள் வெளியாகின.

அதை ஒட்டி அவர்கள் அனைவரும் ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரசின் முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.  அவர், “பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக குதிரைப்பேரத்தில் இறங்கி உள்ளது.   எனவே காங்கிரஸ் மற்றும் ம ஜ த உறுப்பினர்கள் அனைவரும் ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முதலில் பெங்களூருவில் அவர்களை தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.   ஆனால் சில பாஜகவினர் அவர்களை ரகசியமாக சந்திக்க முயன்றதை அடுத்து அவர்கள் ஏற்கனவே தங்கி இருந்த ஈகிள்டன் ரிசார்ட்டில் இருந்து ஐதராபாத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   இரு கட்சியினரும் தனித்தனியாக இரு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]