புதுச்சேரி:

புதுச்சேரியில் உள்ள  காலாப்பட்டில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டதால், போலீசார் துப்பாகி சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள ரசாயண மருந்து தொழிற்சாலை விரிவாக்கப் பணி தொடர்பாக இன்று கருத்துக்கேட்பு கூட்டம் ஆட்சியர் தலைமையில்  நடைபெற்றது.

அப்போது, ஆலை விரிவாக்கப்பணிக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த கூட்டத்தில் மோதல் உருவானது. இதையடுத்து இரு தரப்பினரும் ஆட்சியர் முன்னிலையில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு விசியும் கலவரக்காரர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இதன் காரணமாக  கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அந்த பகுதியில்  பதற்றம் நீடித்து வருகிறது. ஏராளமான துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.