பெங்களூரு:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவை கூட இருக்கிறது. இதன் காரணமாக பெங்களூரில் குறிப்பிட்ட பகுதிகளில் காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவையான விதான்சவுதா பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உச்சநீதி மன்ற உத்தரவுபடி இன்று மாலை எடியூரப்பா நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன்படி, கர்நாடக சட்டப்பேரவையான விதான்சவுதாவை சுற்றி 1 கி.மீ. தொலைவுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று காலை கர்நாடக டிஜிபி நீல்மணி என்.ராஜு, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து பேசினார். அப்போது நகரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.