பாட்னா:

பீகார் சட்டசபையில் நீதிஷ்குமார் மீதான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறு கிறது. இதில் அவர் வெற்றி பெறுவாரா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நேற்று முன்தினம் திடீரென பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து பாரதியஜனதா ஆதரவுடன் நேற்று காலை மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.

அப்போது அவருக்கு, 2 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கவர்னர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று பீகார் சட்டசபையில்,  நிதிஷ்குமார் இன்று தனது அரசுக்கு நம்பிக்கை வாக்கு கோருவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற் பீகார் சட்டசபை தேர்தலின்போது, பாரதியஜனதாவுக்கு எதிராக, ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வ ரானார் நிதிஷ்குமார். துணைமுதல்வராக  ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பதவி வகித்து வந்தனர்.

லல்லுபிரசாத் யாதவ் ரெயில்வே மினிஸ்டராக இருந்தபோது,   ரயில்வே ஹோட்டல்களுக்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

இதையடுத்து தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் விரும்பியது. ஆனால், ராஷ்டிரிய ஜனதா தளம் மறுத்துவிட்டது.

அதைத்தொடர்ந்து நடபெற்ற அரசியல் மாற்றங்களை தொடர்ந்து, இன்று நிதிஷ்குமார் சட்டமன்றத்தில் பெரும்பான்மைய நிரூபிக்கிறார்.

243 உறுப்பினர்கள் கொண்ட பீகார்  சட்டசபையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு 80 உறுப்பினர்கள்; காங்கிரஸுக்கு 27 என மொத்தம் 107 எம்ம்.எல்.ஏக்க்கள் உள்ளனர்.

நிதிஷ்குமாருக்கு ஜனதா தளக் கட்சியின் 71 எம்எல்ஏக்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் 58 என 129 எம்.எல்.ஏக்க்கள் உள்ளனர்.

பெரும்பான்மைக்கு தேவை 122 எம்.எல்.ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நிதிஷ்குமார் எளிதில் வெற்றிபெறுவார் என்று கூறப்படுகிறது.