கொடைக்கானல்

கொடைக்கானலில் உள்ள தற்கொலை முனை என அழைக்கப்படும் பாறைக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாசுக்கும் உள்ள தொடர்பு குறித்த செய்தி இதோ

தமிழ்நாட்டில் உள்ள கோடை சுற்றுலாத் தலங்களில் மிகவும் புகழ்பெற்றவற்றில் கொடைக்கானலும் ஒன்றாகும்.   மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த இடத்தில் பல பாறைகள் உள்ளன.  அவற்றில் இருந்து கீழே உள்ள நிலப்பகுதிகளையும் அங்குள்ள இயற்கைக்காட்சிகளையும் காண்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

அவ்வகையில் அங்குள்ள ஒரு பாறை முனைக்கு ஆங்கிலேயர்கள் கிரீன் வேலி வியூ பாயிண்ட் என பெயர் இட்டுள்ளனர்.   இதற்குத் தமிழில் பசுமை பள்ளத்தாக்கு பார்வை முனை எனப் பெயராகும்.   ஆனால் இந்த பகுதிக்குத் தற்கொலை முனை அதாவது சூயிசைட் பாயிண்ட் என இன்னொரு பெயர் உண்டு.  பலரும் அவ்வாறே அழைத்து வருகின்றனர்.

இந்த இடத்தில் பணி புரிந்த அரசு அதிகாரி ஒருவருக்கு இந்த பெயர் சிறிதும் பிடிக்காமல் இருந்தது.   இந்த பகுதியைத் தற்கொலை முனை என அழைப்பதால் அது பலருக்கும் எதிர்மறையான எண்ணங்களைத் தெரிவிப்பதாகக் கூறிய அவர் இந்த பெயரை  பெரும் முயற்சி செய்து கடந்த 1989 ஆம் வருடம் மாற்றினார்.

அந்த இளம் அதிகாரியின் பெயர் சக்தி காந்த தாஸ் ஆகும்.  அவர் தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பணி புரிந்து வருகிறார்.