சென்னை: திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்திய இருவரில் ஒருவர் சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்தவர் என்று ஒரு ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியானது தவறு என்று சி.பி.ஐ. கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்திய ஆர்.முத்துராமன், பிரான்சிஸ் ஆகிய இருவரையும் மக்கள் பிடித்துக் கட்டிவைத்து, காவல்துறையில் ஒப்படைத்தனர்.

முத்துராமன், திருப்பத்தூர் நகர ஒன்றிய பா.ஜ.க. செயலாளர். அவரை தற்போது அக்கட்சி, நீக்கியிருக்கிறது.

அவருடன் கைது செய்யப்பட்ட இன்னொருவரான  பிரான்சிஸ், திருப்பத்தூர் நகர சி.பி.ஐ. கட்சியின் துணை செயலாளராக இருக்கிறார் என்று  ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

ஆனால், பிரான்சிஸ் என்பவர், சி.பி.ஐ. கட்சியின் ஆட்டோ தொழிற்சங்கம் ஒன்றில் இருந்ததாகவும்,  இரண்டு வருடங்களுக்கு முன்பே அவர் நீக்கப்பட்டுவிட்டதாகவும் சி.பி.ஐ. கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.