பர்மிங்காம்:
காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியாவும், பெண்கள் பிரிவில் வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கும் தங்கம் வென்றனர்.

44 -வது சீசன் காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டனின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.

இதில் மல்யுத்த போட்டியில், ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, கனடா வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார்.

அதே போன்று பெண்கள் மல்யுத்தம் பிரிவின் 62 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சாக்சி மாலிக் கனடாவின் ஆனாகாட்வியாவை வீழ்த்தி தங்கம் வென்றார். மேலும் மல்யுத்த பிரிவில் தீபக் புனியா தங்கம் வென்றார்.இதுவரையிலான போட்டிகளில் இந்தியா 9 தங்கப்பதகக்கங்களை வென்றுள்ளது.மல்யுத்த பிரிவில் மற்றொரு வீராங்கனையான அன்சு மாலிக் என்பவர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.