லண்டன்:

பிரிட்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சி மாநாடு தொடங்கியது.

ராணி 2ம் எலிசபெத் பிரிட்டனின் வின்ட்ஸோர் கோட்டையில் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ராணி பேசுகையில், ‘‘தனக்கு பிறகு காமன்வெல்த் கூட்டமைப்புக்கு இளவரசர் சார்லஸ் தலைமை தாங்குவார். உறுப்பு நாட்டு தலைவர்கள் சார்லஸ் தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.

முன்னதாக 52 நாடுகளின் தலைவர்கள் அணிவகுத்து மாநாட்டிற்கு வந்தனர். இதில் வங்கதேச பிரதமர் ஷே க் ஹசீனா, இந்திய பிரதமர் மோடி, பாக். பிரதமர் ஷாகித் அப்பாசி ஆகியோர் முதல் வரிசையில் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.