ரவுண்ட்ஸ்பாய்:
பச்சமுத்து.. ஸாரி, பாரிவேந்தர் கைது செய்யப்படதை. “உண்மைகளை உடனுக்குடன்” சொல்லும் புதிய தலைமுறை தொலைக்காட்சி சொல்லவே இல்லை. அப்புறம் பத்தோட பதினொன்னா சொன்னதா நம்ம நண்பன் ரோசா நேசன் சொன்னான்.
அந்த டிவியில உக்காந்துகிட்டு, உலக நடப்பை எல்லாம் அலசி கருத்து மேல கருத்தா கொட்டுற அறிஞ்சர்கள் யாரும் இந்த கைது பத்தி பேசவே இல்லே. அட அந்த டிவியில உக்காந்து பேச முடியாதுதான். எல்லாத்தையும் பத்தி தங்களோட முகபுக்கல எழுதறாங்களே.. அப்படி எழுதியிருக்கலாமே..
இந்த என்னோட ஆதங்கத்த 55 நிமிசத்துக்கு முன்னால போக்கியிருக்காரு மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், விமர்சகர், கருத்தாளர் ஞாநி சங்கரன் அவர்கள்.
தன்னோட பேஸ்புக் பக்கத்துல, மாஃபா பாண்டியராஜன் அமைச்சரானது பத்தி கருத்தை பதிவு செஞ்சாரு ஞாநி.
அதுல ராஜானு ஒருவத்தரு வந்து “பச்சமுத்து கைது குறித்து உங்க கருத்து என்ன”ன்னு பட்டுனு கேட்டுப்புட்டாரு.
அடுத்த ஐஞ்சே நிமிசத்துல் ஞாநி படார்னு ஒரு கருத்தை சொல்லிட்டாரு:
“சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்!”
டிவி கருத்தாளர்கள்ல முதன் முதலா பச்சமுத்து பத்தி கருத்து சொன்னவரு ஞாநி சார்தான். நன்றிங்க சார்!