தஞ்சை
தமிழகம் முழுவதும் வரும் 21 ஆம் தேதி கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவர்,
” முன்பு தமிழ் மக்களின் உணவின் ஒரு பகுதியாக கள்ளும், பழைய சோறும் இருந்தது. அந்த கால கடத்தில் புற்றுநோய் உள்படத் தொற்று நோய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது. தற்போது இந்த இரண்டும் இல்லாததால் தற்போது நோய்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து விட்டது.
ஆகவே நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல் நாள் ஆளுநர் உரையில் கள்ளுக்குத் தடை நீக்கம் பற்றிய அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும் இதை அரசியல் சாசன சட்டத்தின்படி ஏற்றுச் செயல்படுத்துவார்கள் என நம்புகிறோம்.
இந்த நம்பிக்கை பொய்த்துப் போனால் திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் வரும் 21ம் தேதி முதல் கள் இறக்கி விற்கும் போராட்டம் நடத்தப்படும்.”
எனத் தெரிவித்துள்ளார்.