கீவ்

க்ரைன் நாட்டின் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் பெட்ரோ போரோஷெங்கோவி யை நகைச்சுவை நடிகர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி வென்றுள்ளார்.

உக்ரைன் நாடு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டின் அதிபராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7 ஆம் தேதி முதல் பெட்ரோ போரோஷெங்கோ பதவி வகித்து வருகிறார். இவருடைய பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் இந்நாட்டில் அதிபர் தேர்தல் மார்ச் மாதம் 31 ஆம் தேதி நடந்தது. இதில் 39 பேர் போட்டி இடனர்.

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ, முன்னாள் பிரதமர் யூலியா டிமோஷெங்கோ மற்றும் நகைச்சுவை நடிகர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. இதில் ஜெலன்ஸ்கி மற்றும் பெட்ரோ ஆகியோர் முதல் இரு இடங்களில் இருந்தனர். ஆயினும் யாரும் 50% வாக்குகள் பெறவில்லை.

உக்ரைன் நாட்டு அரசியல் சட்டப்படி தேர்தலில் 50% அதிகமான வாக்குகளை பெற்ரவர்கள் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அப்படி இல்லை எனில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும். அதில் முதல் இரு இடங்களை பெற்றவர்கள் மட்டும் போட்டி இடுவார்கள். அதன்படி பெட்ரோ மற்றும் ஜெலன்ஸ்கி ஆகியோர் இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டி இட்டனர்.

நேற்று நடந்த இந்த இரண்டாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவின் முடிவில் நட்னதகருத்துக்கணிப்பில் ஹெலன்ஸ்கி முன்னிலையில் இருந்தார். வாக்கு எண்ணிககை தொடங்கியதில் இருந்தே ஜெலன்ஸ்கி முன்னணியில் உள்ளார். தற்போதைய நிலையில் ஜெலன்ஸ்கி 75 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளார். பெட்ரோவுக்கு 24.66 % வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.