அமராவதி:

மாநிலத்தில், லஞ்ச லாவன்யம் இல்லாத ஆட்சியை நடத்த விரும்பும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால், உடனே புகார் அளிக்கும் வகையில்  இலவச டெலிபோன் வசதியை ஏற்படுத்தி உள்ளார். ஜெகனின் இந்த அதிரடி நடவடிக்கை அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஆந்திரா  மாநிலத்தில்,  ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி  செய்து வருகிறது. முதல்வராக ஜெகன் பதவி ஏற்றது முதல், மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அதன்படி, மதுபான கடைகள், பார்கள் குறைப்பு, புதிய அரசு பணி நியமனம் மற்றும், அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி உள்பட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், மாநிலத்தில் நிலவும் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்கும் வகையில், பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச டெலிபோன் வசதியை  ஏற்படுத்தி உள்ளார். மாநிலததை லஞ்சம் லாவண்யம் இல்லாத மாநிலமாக மாற்றும் முயற்சியின் பயனாக,  அரசு துறைகளில் ஊழியர்கள், அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க 14400  என்ற இலவச டெலிபோன் எண்ணை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். அத்துடன், ஊழல் தடுப்பு பணியகம் ஜெனரலாக குமார் விஸ்வஜித் என்ற அதிகாரியையும் நியமனம் செய்துள்ளர்.

இதுகுறித்து கூறிய ஊழல் தடுப்பு அதிகாரி, குமார் விஸ்வஜித், அரசு அதிகாரிகள் யாராவது லஞ்சம் தருமாரு வற்புறுத்தப்பட்டால் 14400 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டுபொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும், அவர்களின் புகார் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக  ஆந்திர முதல்வரின்  அலுவலகத்தில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.