மும்பை

ரும் 15 ஆம் தேதி முதல் 50% மாணவர்களுடன் மகாராஷ்டிராவில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மார்ச் 25 முதல் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.   அதையொட்டி அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.   அதன்பிறகு தற்போது சிறிது சிறிதாக தளர்வுகள் அறிவிக்கப்படும் நிலையில் வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், மதுக்கடைகள் உள்ளிட்ட பலவும் திறக்கப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 11 மாதங்களாகக் கல்லூரிகள் கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ளன.  தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் மகாராஷ்டிர தொழில் நுட்ப மற்றும் உயர்கல்வி அமைச்சர் உதய் சமந்த் பிப்ரவரி 15 முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கல்லூரிகளில் வகுப்புக்களில் 50% மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனக் கட்டுப்பாடு விதித்துள்ளார்.  கல்லூரிகள் மிகவும் குறைந்த காலகட்டம் மட்டுமே இயங்க உள்ளன.  எனவே அரசு விதிமுறைப்படி குறைந்த பட்சம் 75% வருகைப் பதிவு இருக்கவேண்டும் என்பது இவ்வருடம் ரத்து செய்யப்பட்டுள்ளது.