சென்னை: தமிழகத்தில் வரும் ஆகஸ்ட்9 ஆம் தேதி முதல் ஆன்லைன் வழியாக வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து கல்லூரி ஆசிரியர்களும் தவறாது கல்லூரிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கல்விநிறுவனங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், தொழிற்கல்விக்கான கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் போதிக்கத் தொடங்கி உள்ளன.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அனைத்து கல்லுரிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
மேலும் வரும் 9 ஆம் தேதி முதல் அனைத்துப் பேராசிரியர்களும், பணியாட்களும், அனைத்து அலுவல் நாட்களிலும் கல்லூரிகளுக்கு வருகை தர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.