திருச்செந்தூர்
தொடர் மழை காரணமாக இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு யாரும் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”தாஅமிரபரணி ஆற்றில் தற்போது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மிக அதிகமாக வெள்ளநீர் வந்து கொண்டுள்ளது.மேலும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் செல்வதால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும், நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
இந்த போக்குவரத்தை சீர்செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. தொடர் மழை வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு 14-ந் தேதி (நேற்று), 15-ந் தேதி (இன்று) ஆகிய 2 நாட்கள் வெளியூரில் இருந்து பொதுமக்கள் வர வேண்டாம்.”
எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.