வாஷிங்டன்
எக்ஸ் தளத்தில் பயனர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் டிவிட்டர் சமூக வலைத்தளத்தை வாங்கினார். அப்போதிருந்து அவர் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். கடந்த ஜூலை பிற்பகுதியில், டிவிட்டரின் லோகோ மாற்றப்பட்டு ‘எக்ஸ்’ சமூக வலைத்தளமாக மாறியது.
எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் கைரேகைகள் உள்பட பயோமெட்ரிக் தகவல்களை தற்போது சேகரித்து வருகிறது. ஆனால் ஆகஸ்டு மாதம் இறுதிவரை எக்ஸ் சமூக வலைத்தளம் பயோமெட்ரிக் தகவல்கள் எதையும் கேட்டது இல்லை.
பயனர்களின் ஒப்புதலின் அடிப்படையில் பாதுகாப்பு, மற்றும் அடையாள நோக்கங்களுக்காக உங்கள் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் விளக்கம் அளித்து உள்ளார். மேலும் இது பயனரின் விருப்பத்திற்கு உட்பட்டது எனவும் அவர் கூறி உள்ளார்.