உக்ரைன்:
யரம் குறைவாக இருந்த காரணத்தால் இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த மாணவர் சாய் நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் போர் நடந்துக்கொண்டு இருக்கிறது.

அதன் படி, இன்றுடன் கிட்டதட்ட 13 வது நாளாக இந்த போர் நீடித்து வருகிறது. உக்ரைனில் நடக்கும் இந்த போரைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் கிட்டதட்ட 17 லட்சம் பேர் அருகில் உள்ள அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருவதாகவும் ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.

இந்த சூழுலில் தான், “உக்ரைன் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ள மக்கள், நாட்டின் பாதுகாப்புக்காக இணைந்து பணியாற்றலாம்” என்று, அந்நாட்டு ராணுவம் சமீபத்தில் அறிவித்தது.

அந்த வகையில் தான், தமிழகத்தின் கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தைச் சேர்ந்த சாய்நிகேஷ் என்ற இளைஞர், உக்ரைன் துணை ராணுவத்தில் தற்போது இணைந்து பணியாற்றி வருகிறார்.

உயரம் குறைவாக இருந்த காரணத்தால், இந்திய ராணுவத்தில் சாய் நிகேஷால் சேர முடியாமல் போனதாகவும் அவரது பெற்றோரும் உளவுத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, உக்ரைனுக்கு படிக்க சென்ற சாய் நிகேஷ், போர் சூழலை பயன்படுத்தி அந்நாட்டு ராணுவத்தில் இணைந்து, ராணுவ வீரராகும் தமது கனவை அடைந்து இருக்கிறார், என்பதும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.