சென்னை: ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராக, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர், கோவை சி.பி.ராதாகிருஷ்ணன் நிமிக்கப்பட்டு உள்ளார். அவருடன் சேர்ந்த 12 மாநிலங்களுக்கும் ஆளுநர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கோவை ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
ஆந்திரம், அருணாசல், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநா்களையும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு புதிய துணைநிலை ஆளுநரையும் நியமித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, 12 மாநிலங்களுக்கும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு புதிய துணைநிலை ஆளுநரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பட்டியலில், தமிழகத்தைச் சோந்த மூத்த பாஜக தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். சிக்கிம், ஜாா்க்கண்ட், ஹிமாசல், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு பாஜகவை சோந்த தலைவா்கள் ஆளுநா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தைச் சோந்தவரும் மணிப்பூா் ஆளுநராகவும் இருந்த இல.கணேசன், நாகாலாந்து ஆளுநராக மாற்றப்பட்டுள்ளாா்.
உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி கடந்த ஜனவரி 4-ஆம் தேதி ஓய்வு பெற்ற எஸ்.அப்துல் நஸீா் ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமா் கோயில் கட்ட அனுமதி, முத்தலாக் நடைமுறைக்குத் தடை உள்ளிட்ட தீா்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்ற அமா்வுகளில் அவா் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர ஆளுநராக இருந்த பகத்சிங் கோஷியாரி தான் பதவி விலகுவதாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், , லடாக் துணைநிலை ஆளுநராக இருந்த ஆா்.கே.மாத்துா் ஆகியோரின் ராஜிநாமாவையும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஏற்றுக் கொண்டுள்ளாா்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுன்ககு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழக பாஜக மூத்த தலைவர்களாக இருந்த தமிழிசை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். மணிப்பூர் ஆளுநராக இல. கணேசன் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும், தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்த சி.பி,ராதாகிருஷ்ணனை ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.