கோவை கொடிசியா வளாகத்தில் ஜி.எஸ்.டி., வருமான வரி, வங்கி மற்றும் காப்பீடு ஆகியவற்றில் தொழில்துறையினர் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த புதனன்று (செப். 11) கலந்துரையாடினார்.

இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோவை ஸ்ரீ அன்னபூர்னா உணவக குழும தலைவருமான சீனிவாசன், ஜிஎஸ்டி குளறுபடி குறித்தும் தனது உணவகத்தின் ரெகுலர் கஸ்டமரான பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அவர் சாப்பிட்ட பொருளுக்கான ஜிஎஸ்டி குறித்து தினமும் சண்டைக்கு வருவதாகவும் கூறியிருந்தார்.

உணவுக்கு 5%. காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி. பிரட் பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை.. ஆனால் உள்ள வைக்குற கீரீம்கு ஜிஎஸ்டி இருக்கு. இப்படி ஒரே மாவில் ஒரே மாஸ்டர் தயார் செய்த வெவ்வேறு வகையான உணவுகளுக்கு வேறு வேறு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருப்பதால் பில் அடிக்கும் போது கம்ப்யூட்டரே திணறுது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் பேசினார்.

ஏற்கனவே, பெட்ரோலுக்கான வரிவிதிப்பு குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் கோவை ஸ்ரீ அன்னபூர்னா உணவக குழும தலைவர் சீனிவாசனின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறித்து பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக சீனிவாசன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமானுடன் பேசிய புதிய வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனை அவரது இருப்பிடத்தில் சீனிவாசன் சென்று சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது மேலும் இவர்களுடன் வானதி சீனிவாசனும் அங்கு இருந்துள்ளார்.

https://x.com/AgentSmith1507/status/1834291042863956118

இதையடுத்து உணவக உரிமையாளர் பாஜக-வினரால் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று சமூக வலைதளத்தில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஜிஎஸ்டி குளறுபடியும் வானதி சீனிவாசனின் அலப்பறையும்… கிரீம் குறித்த கேள்வியால் அசடு வழிந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…