ஜெய்ப்பூர்: சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபட்டால் ஜாமினில் வெளிவர முடியாத வகையில், 10 ஆண்டு சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் புதிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போதைய மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அரசு ராஜஸ்தான் மத சுதந்திர மசோதா கொண்டு வந்தது. ஆனால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இதனால், அநத் சட்ட மசோதா இருப்பினும், அது சட்டமாக்கப்படாமல் நீர்த்துபோனது. இந்த நிலையில், தற்போது, மதாநில பாஜக முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான அரசு, சட்டவிரோதமாக மதமாற்றங்களை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது (பிப்வரி) நடைபெற்று வரும் சட்டப்பேரவை அமர்வில், மாநில, சுகாதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங், சட்டவிரோத மதமாற்றம் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி, ஒருவரை மத மாற வற்புறுத்துதல், மோசடி, திருமணம் மூலம் சட்டவிரோத மதமாற்றங்களை தடுக்கும் வகையில் அந்த மசோதாவில் ஷரத்துக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக மதமாற்றம் செய்தால் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவதுடன் குறைந்தபட்சமாக ரூ.15,000 அபராதம் வழங்கப்படும் வகையில் மசோதாவில் ஷரத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பட்டியலின, பழங்குடியின நபரை, விதிகளை மீறி சட்டவிரோதமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படும்.
பட்டியலின பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களை, கூட்டமாக சட்டவிரோதமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு ரூ.50,000 அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட சட்டத்தின் விதிகளை மீறும் நிறுவனங்களின் என்ஜிஓக்களின் பதிவு ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
யாராவது வேறு மதத்திற்கு மாற விரும்பினால், அவர்கள் 60 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து அவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்ற பின், ராஜஸ்தானின் சட்டவிரோத மதமாற்றங்களை தடுக்கும் மசோதா நிறைவேறியது. இதையடுத்து, அது கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் அளித்தடுன் இந்த மசோதா அமலுக்கு வரும்.