டில்லி:

ரெயில் பெட்டி கழிவறை தண்ணீரில் தயாரிக்கப்பட்ட டீ, காபியை ரெயில் பயணிகளுக்கு விற்பனை செய்த புகாரின் பேரில், காண்டிராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் மட்டும்தான் விதிக்கப்பட்டுள்ளது.

இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ரெயில் பயணிகளின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற காண்டிராக்டர்களை கடுமையாக தண்டிப்பதை தவிர்த்து, ஒப்புக்கு சப்பாக வெறும் அபராதம் மட்டும் விதித்திருப்பது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

டும் ரெயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் காபி, டீ போன்றவை ரெயில் பெட்டியின் கழிவறையில் உள்ள தண்ணீர் கலந்து விற்பைன செய்யப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இது நாட்டு மக்களிடையே குறிப்பாக ரெயில் பயணத்தை விரும்பும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கழிவறை நீரை பயன்படுத்தி டீ தயாரித்த விவகாரத்தில் அந்த காண்டிராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல்

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள அந்தவீடியோவில், ரெயில் பயணிகளுக்கு விற்பகப்படும் டீ, காபி போன்றவை,  ரெயில பெட்டி கழிவறையில் உள்ள  நீரை பயன்படுத்தி தயாரான சம்பவம் பெரும் பரபரப்பையும், ரெயில்வே நிர்வாகத்தின் மெத்தன போக்கையும் சுட்டிக்காட்டுவதாக இருந்தது.

இந்த வீடியோ, சென்னை – ஹைதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரெயில்வேதுறைக்கு ஏராளமான புகார்கள் குவிந்தன. இதையடுத்து, கழிவறை நீரை பயன்படுத்தி டீ தயாரித்த விவகாரத்தில் அந்த காண்டராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ரெயில்வே மூலம் வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருப்பதாக கூறப்பட்ட புகாரின் போது,  உணவு மற்றும் பானங்கள் தரம் குறைந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருந்தார். ஆனால், தற்போது ரூ.1 லட்சம் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.

இது ரெயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ரெயிலில் விற்கப்படும் உணவு பொருட்களை தரமானதாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வழங்க கடுமையான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, பொதுமக்களை ஏமாற்றும் விதத்தில் வெறும் அபராதம் மட்டும் விதித்திருப்பது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.